கொம்பேறி மூக்கனாய் இருக்க வேண்டிய நேரம் இது....


சிறுவயதில் சொல்ல பட்ட சுவாரசியமான கதைகளில் ஒன்று கொம்பேறி மூக்கன் என்னும் நாகம் பற்றிய கதை
தன் எதிரியை தீண்டிய பிறகு அவன் இறந்து விட்டான என்று சுடுகாடு வரை சென்று பார்த்து விட்டு வருமாம்
இது பொய் என்றாலும் கேட்க சுவாரசியமான ஒரு தகவல் தான்
இதை இப்பொழுது நினைவு படுத்த காரணம்
கண்டிப்பாய் இருக்கிறது .....
தொடர்ந்து மறைமுகமாக பல செயல்களை நம்மிடம் தினிக்கவோ மாற்றவோ ஆளும் வர்க்கம் சில செயல்களை செய்து கொண்டே இருக்கிறது அவை எந்த அரசு என்பதில் வேற்றுமை வேண்டாம்
ஆனால் அவை சிலகாலமாக அதிகரிக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை அதில் பெரும்பான்மையை கண்டுபிடித்தாலும் இந்த உத்தியை பயன்படுத்தி சிலவற்றில் வெற்றியும் பெற்று உள்ளது
இந்த கட்டுரை அதில் சிலவற்றின் தொகுப்பு தான்

கூடங்குளம் என்னும் கொலை களம்.....

எல்லோரும் பயந்தது போல் தான் இப்பொழுது நடக்கிறது
இன்று அணுஉலை என்பீர்கள் நாளை அணுக்கழிவு கொட்டுவீர்கள் எங்கள் வாழ்வாதாரம் அழியும் என்று எதிர்த்து போராடியவர்கள் கூறிய சொற்கள் இன்று நிஜமாகிறது அன்றும் கூடங்குளம் எதிர்க்க பட்டது ஆனால் அன்று இந்தியா கொண்டாடிய மிகப்பெரும் விஞ்யானி
அய்யா APJ அப்துல்கலாம் அவர்களால் வெறும் 15நிமிடம் மட்டும் பார்வை இட பட்டு (ஒரு அழுத்தத்தின் பேரில்)
பாதுகாப்பானது தான் என்று அறிவிக்க பட்டதால் போராட்டம் நீர்த்து போனது அதன் விளைவு இன்று அணுக்கழிவு மையத்தின் தொடக்கம்..

மறக்கடிக்கபட்ட மேகி.....


நம் சிறுவயது முதல் உண்டு வந்த பண்டம் தான் நெடு நாட்களுக்கு (சரியாய் மே 2015 ) பிறகு Monosodium gultamate என்னும் வேதி பொருள் இருப்பதாக நிரூபிக்க பட்டு உத்திர பிரதேசத்தில் தடை செய்ய படுகிறது தொடர்ந்து பல மாநிலம் தடை செய்கிறது இதை அறிந்த மத்திய அரசும் அந்த தடையை  நாடு முழுக்க அமல்படுதுகிறது  எல்லாம் 2,3காலத்திற்குள் நடக்கிறது
இவை ஒரு புறம் இருக்க அன்றைய மத்திய உணவு அமைச்சர் ரம் விலாஸ் பாஸ்வான் மேகியில் அப்படி ஒரு பொருள் இருப்பது போல் தெரியவில்லை என்று பேட்டி கொடுக்கிறார் அடுத்த மாதம் மேகியில் அப்படியொரு MSG குறிப்பிட பட்ட அளவே இருக்கிறது என்று கூறி மும்பை நீதி மன்றம் தடையை நீக்குகிறது
இதில் வியப்பே என்ன என்ன ஆய்வுகள் அந்த உணவு பொருளின் (மேகி)  நடத்தப்பட்டன என்ற தெளிவான தகவல் இல்லாதது தான் ..

பொங்கல் விடுமுறை..


ஒரு இனத்தை அழிக்க அதன் பண்பாட்டை அது சார்ந்த வழக்கங்களை அழித்தால் போதும் என்பர் அதன் ஆரம்ப புள்ளி தான் பொங்கலுக்கு விடுமுறை இல்லை என்று வந்த பிரச்சனை
மத்திய அரசு ஊழியர் சங்கம் தான் விடுமுறைகளை நிர்ணயம் செய்கிறது அதில் தமிழர் விருப்பத்தை ஏற்காமல் செய்யப்பட்டது இது இதை எதிர்த்து குரல் வெடித்த பின் திருத்தி கொண்டது மத்திய அரசு.
ஆனாலும் ஒரு தனி அடையாளமாய் இருக்கும் மாநிலங்களை பெரும் அளவில் அது குறி வைக்கிறது குறிப்பை அந்த மத்திய அரசின் கட்சி தலைவர் அமித்ஷா கேரளாவின் பாரம்பரிய ஓணம் பண்டிகையை( மகாபலி என்னும் அரசன் தன் மக்களை பார்க்க வரும் நாளாக கொண்டாட படுவது) வாமன பண்டிகை ஆக்க சொல்கிறார்
பொங்கலை சங்கராந்தி ஆக்குகிறார்


பெயர் மாற்ற பட்ட பேரபாயம்...


  காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்க பட்ட வேளாண் மண்டலமாய் அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிரமூலமாக்க கொண்டு வந்த நாசக்கார திட்டம் தான் மீத்தேன் இதை தமிழ் எதிர்த்தபோது தான் வந்து ஒரு செய்தி அன்றைய பெட்ரோலிய துறை அமைச்சர் மீத்தேன் திட்டம் கைவிட பட்டது என்று நிம்மதி பெருமூச்சு விட்டு முடிக்கும் முன்னே அதை ஹைட்ரோ கார்பன் என்று பெயர் மாற்றி திணிக்க நினைக்கிறது அதை கண்டுகொண்டு மீண்டும் தமிழகம் போராடி கொண்டு தான் இருக்கிறது....

OC உரிமை போனது...

அரசின் இட ஒதுக்கீட்டில் இருக்கும் பல பிரிவில் ஒன்று தான் OC இது இத்துணை நாட்கள் OPEN CATEGORY என்ற பெயரில் தான் நடைமுறை படுத்த பட்டது ஆனால்  2017 நீட் தேர்வோடு அது OTHER CASTE என்று பெயர் மாற்ற பட்டது  சுருக்கமாய் சொல்லுவது என்றால் OPEN CATEGORYயில் இடஒதுக்கீடு போக மீதி உள்ள இடங்களை எல்லா வகுப்பினரும் போட்டி இடுவர் இப்பொழுது இது OTHER CASTE ஆனதால்  இடஒதுக்கீடு பயன் பெரும் வகுப்பினர் அல்லாமல் பிறர்  என்று பொருள் ஆனது

CTET யில் நடந்த நாடகம்

CBSE மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரிய எழுத படும் எழுத்து தேர்வு பெயரே CTET (CENTRAL TEACHER ELIGIBILITY TEST)
செப்டம்பர் மாதம் நடந்த தேர்வுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வருகிறது 20 மொழிகளில் எழுதலாம் என்று இருந்த தேர்வை ஹிந்தி,சமஸ்கிருதம்,ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் மட்டும் எழுதலாம் என்று அறிவிப்பு வருகிறது பின்பு நாடே வெகுண்டு எழுந்த பிறகு அன்றைய மனித வள மேம்பாடு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அது பொய் என்று பின் வாங்குகிறார்.....

ஹிந்தியை எதிர்த்தோம் ஏன் யோகாவை மறந்தோம்.....


யோகா தினம் கொண்டாட பட்ட பிறகு மத்திய அரசு பள்ளிகளில் அதை கட்டாயம் ஆக்கினர் பின்பு கஸ்தூரி ரங்கன் கமிட்டி சார்பில் ஹிந்தி கட்டாயம் என்று வந்த அறிவிப்போடு யோகாவும் வந்தது ஹிந்திக்கு எழுந்த நம் கோவம் யோகாவிற்கு எழ வில்லை எனில் இனி இஸ்லாமிய,கிறிஸ்துவ, மாணவர்களும் நமஹா சொல்லி தான் ஆக வேண்டும்...

இப்படி ஒரு கட்டுரை எழுதும் போதே ஒரு அறிவிப்பு வந்து மறைகிறது
ரயிலில் இனி ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்ற அறிவிப்பை கொடுத்து விட்டு திரும்ப பெறுகிறது மத்திய அரசு

முன்பே சொன்னது போல் இதில் சில வற்றில் வெற்றியும் பெற்று உள்ளது

குடிமை பணிகளுக்கு ஆனா பயிற்சியில் தான் இறுதி தேர்வு
வங்கி தேர்வுக்கு மாநில மொழி அவசியம் என்ற சரத்தை நீக்கியது உட்பட

இப்படி நாம் அறியாத பல நிகழ்வுகள் உள்ளது
இதில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள உரிமைகளை நிலை நிறுத்த நாம் கொம்பேறி மூக்கணாய் இருக்க தான் வேண்டும்

மீண்டும் கதைப்போம்
அன்பன்

Comments