if world labours are united ..... உலக தொழிலாளர்கள் ஒன்றிணைத்தால்...


If world labours are united.......

உலக தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால்....

ஒரு வேலை இது நடந்தால் என்ன ஆகும்,புதிது புதிதாய் சங்கம் பிறக்குமா,ஊதியத்தில் மாற்றம் வருமா,அதிக வேலை கிடைக்குமா என்ன தான் நடக்கும் என்ற கேள்வி உங்கள் நெஞ்சில் எழும் கவலை வேண்டாம் அதை நடக்கவிடாது பார்த்துக்கொள்ள பல வியாபாரிகள் இருக்கின்றனர்.....

இந்த உலகில் பெண்கள்,சிறுபான்மையினர்க்கு அடுத்து அதிகமாக சுரண்டபடுவதும்,வஞ்சிக்க படுவதும் தொழிலாளர் சமூகமே இந்த பூவுலகம் இப்படி பொண்ணுலகமாய் மாற காரணம் இந்த தொழிலாளர் இனம் தான். ஆனால் இன்று வரை அவர்களுக்கு நடக்கும் அநீதியும்,அடக்குமுறையும் இன்றும் குறையவில்லை சமீபத்திய oxfam நிறுவன ஆய்வு வெளியீட்டில் இந்தியாவின்  73%சொத்து வெறும் 1% செல்வந்த இந்தியர்களிடம் மட்டுமே உள்ளது என்கிறது,நம்தேசத்தின் பாதிக்கும் மேற்பட்ட அஃதாவது 67%மக்களின் வருவாய் வெறும் 1% தான் உயர்ந்து உள்ளது .
நாட்டின் பெரும் பகுதி சொத்தை வைத்துள்ள 1% இந்தியரின் வருவாய் 20.9 லட்சம் கோடி இது ஒட்டு மொத்த இந்தியாவின் கல்வி,சுகாதாரம் ஆகிய துறைகளின் நிதிக்கு ஒப்பாகும்
இதை விட கொடுமை ஒரு கூலி தொழிலாளி நகரின் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரியின் ஒருவருட வருவாய் ஈட்ட 971 வருடம் ஆகுமாம்.....

நம் தேசத்தில் எதற்கு பஞ்சம் வந்தாலும் சட்டங்களுக்கும்,திட்டங்களுக்கும் மட்டும் பஞ்சமே இல்லை,நம் அரசியல் அமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகள்(fundamental rights),அடிப்படை கடமைகள்(fundamental duties)என்று இரு பிரிவு உண்டு இவைகளில் உரிமைகள் நமக்கு கட்டாயம் கிடைக்க வேண்டியவை ஆகும் அவற்றில் ஒன்று தான் right to work வேலை செய்து பொருள் ஈட்டுவதற்கான உரிமை,ஆனால் நாம் வேலை மட்டும் செய்து பொருளை எங்கோ இழக்கிறோம்....ஓரு நெசவாளர் ஒருநாளைக்கு 166000 தடவை தன்னுடைய கைகளையும் கால்களையும் இயக்குகிறார் ஆனால் அதற்கு அவருக்கு வெறும் ₹80 தான் வருமானம்,பானை வடிக்கும் குயவன் மண் அள்ளி, காயவைத்து அதை அழகாய் வடித்தாலும் அந்த 2,3 நாள் வேலைக்கு அவனுக்கு கிடைப்பது ₹100-₹150
 வரை தான்

ஆனால் சட்டம் சொல்லுவது ஒரு மனிதனின் குறைந்த பட்ச ஊதியம் ₹18000 ஆகும்என்று ஆனால் உண்மை நிலை வேறாய் உள்ளது இங்கு 10ல் 9 பேருக்கு பணிபாதுகாப்பு இல்லை எப்பொழுது வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம் என்ற நிலையிலேயே இருக்கின்றனர்
இவற்றின் நீட்சியே 8 மணிநேரத்துக்கும் மேல் வேலை செய்வது,விடுமுறை நாளிலும் பணிபுரிவது  போன்றவை நிகழ்கின்றன குறிப்பாய் மார்க்கெட்டிங் துறையில் 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்வது இயல்பாய் இருக்கின்றன. நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு சலுகை செய்வது போல் கணக்கு காட்டி தாங்கள் வரிவிலக்கு பெற்று கொள்கின்றன அவை தான் நமக்கு incentive ஆகவும்,increment ஆகவும் வருகின்றன அவர்களின் லாபத்தில் கிடைப்பது அல்ல, சில நேரங்களில் சட்டம் எதிராகத்தான் நமக்கு உள்ளது முன்பு 10% தொழிலாளர் ஒப்புதல் இருந்தால் போதும் union ஆரம்பிக்க இன்று அவை 30% வரை உயர்ந்து உள்ளது அரசிடம் தெரிவிக்காமல் 100 பேர் வரை தான் வேலைக்கு எடுக்க இயலும் இன்றோ அவை 300 இன்னும் எத்தனையோ இவற்றில் பெண்களின் நிலை இன்னும் மோசம் குறிப்பாய் இந்த வயதினர் இவ்வளவு சம்பாரிக்க வேண்டும் என்றுஒரு கணக்கு இருக்கிறது அதில் பெண்கள் 26 விழுக்காடு வேற்றுமையில் இருக்கின்றனர் 3ல் ஒரு பங்கு வேலை பெண்களுக்கு வழங்க பட வேண்டும் என்பது விதி ஆனால் இதுவரை இதை எந்த நிறுவனமும் கடைபிடித்ததாய் தெரியவில்லை.

சர்வதேச அளவில் மாலி,யானைதந்த( ivory coast) போன்ற நாடுகளில் குழந்தை தொழிலாளர்கள் கோ-கோ காடுகளில் பிழியப்படுவது போல் இந்தியாவில் உ.பி. யில் ரயில்வே தண்டவாளத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாய் பணிபுரிகின்றனர்.இன்னும் முதலாளி,எஜமானர் தருகிற சம்பளத்தை பெரிதென நினைக்கும் தொழிலாளி முழுதாய் உணரவில்லை அவர் போடும் கறித்துண்டு நம்உடலில் இருந்தே உருவபட்டது என்று.....
ஒரு பழமொழி உண்டு எல்லோரும் தேர் ஏறினால் யார் தேரை இழுப்பது என்று ஆனால் புரிந்துகொள்ள வேண்டியது வலம் வந்தால் தான் தேருக்கு பயன் அவை இழுப்பவரால் தான் வருகிறது தொழிலாளர்களும் அப்படி தான் அவர்களால் தான் ஒட்டுமொத்த நிறுவனங்களும் வளர்கின்றன...
இந்த உண்மையை உணர்ந்து கொண்டால்......
விழிப்புற்றால்...
உலக தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால் நம் சங்கிலிகள் உடைபடும் என்பது மட்டுமே உண்மை...

If the world labours are united,you will not lose anything except your chains....
            -karl marx
உலக தொழிலாளர்கள் எல்லோரும் ஒன்றிணைத்தால்,நீங்கள் உங்கள் சங்கிலியை தவிர வேறு ஒன்றையும் இழக்க போவது இல்லை....
       -காரல் மார்க்ஸ்

#அன்பன் கதைக்கிறேன்

Comments

Post a Comment