சுயநலத்தோடு வாக்களியுங்கள்.....👆

சுயநலத்திற்காக வாக்களியுங்கள்

பிரச்சார வேகம் தணிந்த நேரம் யாரும் குழப்பி விட கூடாது என்பதற்காக விடபட்ட இடைவெளி இது
ஆனால் உண்மையில் உங்களை குழப்ப தான் இந்த கட்டுரை.
எதை வைத்து நாம் ஒருவரை தேர்ந்தெடுப்பது பயன்படுத்தும் காரணிகள் சரியா என்பதை சோதிக்க தான் இந்த சிறு கட்டுரை

உண்மையில்,தேர்தல் பொது நலம் வேண்டி அல்ல சுயநலம் வேண்டி  சிறு சிறு சுயநல நதிகள் சேர்ந்துதான் பெரும் பொதுநல கடல் உருவாகிறது என்பதை நாம் அறிய வேண்டும்
தன் வீட்டு விதவை பெண் துயர் துடைக்க செய்தது தான் பின்னாளில் விதவை மறுமணம் ஆனது
இப்படி  சுயநலவேரில் தான் பொதுநல தரு தலைகிறது
நாம் சுயநலத்தோடு தான் வாக்களிக்கனும் 
சின்னம் தாண்டி,கட்சி தாண்டி,பணத்தை தாண்டி கேடுகெட்ட சாதியை தாண்டி சுயநலத்தோடு வாக்களிக்கனும்
ஒவ்வொருவரையும் அலசுவோம்,அவன் வரலாறு படிப்போம் அவன் உண்மை தன்மை அறிவோம் அவன் இயல்பான வாழ்க்கையில் நேர்மை இருக்கிறதா என்று ஆராய்வோம் அமெரிக்காவில் 1முறை தவறாய் வண்டி ஓட்டி கைதானவன் அதை சொல்லி மன்னிப்பு கேட்கிறான் தவறு என்று
அப்படி பட்டவனை தேடுவோம் உரிய நேரத்தில் உற்றாய் நின்றவனை அறிவோம்
அவன் எந்த கட்சியாயினும் தயங்காது வாக்களியுங்கள்
எந்த கட்சியையோ எந்த கொள்கையையோ சாராமல் எந்த மக்கள் பிரதிநிதியும் இருக்க முடியாது,
இங்கே கரைபடியாத கட்சியே இல்லை

அதே போல் அவர்கள் பற்றி சொல்ல நன்மைகளும் இல்லாமல் இல்ல
எல்லா கொள்கையும் ஒரு நாள் நன்மையாகும் ஒரு நாள் தீமையாகவும் மாறும் கொள்கையும் மாற்றத்திற்கு உட்பட்டதுதானே
இன்று நாடே எதிர்க்கும்
பாசிச கட்சி,அராஜக கட்சி என்ற பா.ஜ.க வில் தான் கடந்த 15 ஆண்டுகளில் சுஷ்மா சுவராஜ்,நிதின் கட்கரி,ராஜ்நாத் சிங் ,அமித்ஷா என்று பல பேர் தலைவர்கள் ஆனார்கள் இதுவரை எந்த தேசிய கட்சியிலும் இத்துணை பேர் ஆனது இல்லை, வாரிசு அரசியல் என்று பெயர் சுமக்கும் காங்கிரஸ் காலத்தில் தான் இதுவரை இல்லாத 9%வளர்ச்சி எட்ட பட்டது
ஜெயலலிதா சென்றபிறகு  முட்டாள்கள் கூட்டம் என்று நினைத்த அதிமுக தான் கல்வி துறையில் 9சிறப்பான திட்டம் தந்து உள்ளது
ஊழல் திமுக தான் 10% இட ஒதுக்கீட்டு துவங்கி நாகசாமி நியமனம் வரை தனியாய் எதிர்த்து குரல் கொடுத்தது
பொய் அதிகம் கூறும் நாம்தமிழரும், புகழ் ஒளி தேடும் மக்கள் நீதி மய்யமும் தான் நாம் கஜா புயலில் இருந்து கரை சேர பெரிதும் உதவினார்கள்
இப்படி எல்லா கட்சியிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு ஒரு வேட்பாளர் இதில் ஒன்றை ஏற்று கொள்ளாமல் இருக்க முடியாது  தானே
நான் முன்பு சொன்னது போல் தான் உங்களை குழப்பி விட்டேன் என்று நம்புகிறேன்
ஆம் குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க இயலும்

சின்னம் பார்த்து வாக்களிக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள்👆🏾

#அன்பன்

Comments