சார் நீங்க settledஆ??????


சார் நீங்க settledஆ????




வார்த்தைகளுக்கு கை,கால்கள் உண்டு  ஏன் சில வார்த்தைகள் கத்தி,கம்பும் கூட வைத்திருக்கும்
சில வார்த்தைகள் பூங்கொத்து நீட்டி நம்மை வரவேற்கும்
ஒவ்ஒரு வார்த்தையும் நம்மிடை ஒரு உணர்வை,தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் வேண்டாம் .ஒரு காலத்தில் "kettle" என்ற வார்த்தை மிக பெரிய தாக்கத்தை,அதிர்வை ஒரு நல்உணர்வை ஏற்படுத்தியது.
அது போலவே ஒரு வார்த்தை பன்நெடுங்காலமாக இளைஞர்கள் மத்தியில் ஒரு பதட்டத்தை,பயத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது.
அந்த வார்த்தை தான் "settle"


சார் நீங்க settleஆ??? இந்த jobக்கு போனா lifesettled என்ற வார்த்தைகளை எல்லாம் கேட்காமல் நிச்சயம் ஒருவர் தன் இளமை பருவத்தை கடக்க முடியாது
சரி அப்படி என்ன தான் இந்த சொல்லுக்கு அர்த்தம்....
நிலைபெற்ற அல்ல நிலையான இடம் என்பதே பொருள்..
என் வேதியல் ஆசான் ஒருவர் மின்அணுக்களின் நிலைபற்றி விளக்க ஒரு எடுத்துகாட்டு சொல்லுவார்
எடுத்துக்காட்டின் வழியே பாடம் நடத்துவது அவர் இயல்பு
அஃதாவது நீங்கள் நின்று கொண்டு இருந்தால் உங்களை எளிதில் விழவைத்துவிடலாம் அப்பொழுது அது நிலையற்றது (unstable)
அதுவே நீங்கள் படுத்திருந்தால் உங்களை விழவைக்க முடியாது எனவே அது நிலையானது (stable) அல்லது settled.எல்லோரும் நம்மை இந்த நிலையான இடத்திற்கு நோக்கி தான் நகர சொல்கின்றனர் அதற்கு சிலரை உதாரணமும் காட்டுகின்றனர் ஆனால் உண்மையில் அப்படி ஒரு நிலையான இடமே இல்லை,அப்படி இருந்தாலும் அது சிகரத்தின் உச்சம் போல் தொடலாம்.அங்கேயே வாழ முடியாது என்பதே உண்மை.
Superstar என்ற பட்டத்திற்கும் மேல் என்ன வேண்டும் ஆனாலும் இன்னும் ஓடி கொண்டே இருக்கிறார் அவர்.
அணைத்து விருதுகளையும் இந்திய அணிக்கு வாங்கித்தந்த பிறகும் மீண்டும் பெற வேண்டும் என்று வலைபயிற்சியில் தோனி.ஏற்கனவே இயற்றிய பாட்டின் கிறக்கத்தில் இருந்தே இன்னும் மீளாமல் இருக்கிறோம் ஆனாலும் இன்றும் புது பாட்டிற்க்கு மெட்டுஅமைக்கிறார் இசைஞானி.
இவர்கள் அத்துணை பேரும் நீங்கள் எடுத்துக்காட்டிய settle ஆனவர்கள்.ஆனாலும் தன் இடத்தை தக்கவைக்க தன்னை மெருகேற்றிகாள்ள இயங்கிகொண்டே இருக்கின்றனர்.
எனில் இவர்கள் நிலையை settled என்று கூறுவது எப்படி பொருந்தும்.எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் கூறுங்கள்.யோகாசன வகுப்புகள் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும் ஒவ்ஒரு ஆசனம் முடிந்த பிறகும் 20-30 நொடிகள் உடலை சீராக்க "சவாசனம்" என்றொரு ஆசனம் செய்வர் அதாவது சவம்(பிணம்)போல் படுத்திருப்பது அது உடலை சீராக்கி மீண்டும் புதிய ஆசனம் செய்யத்தான் ஆனால் நம்மவர்களோ இந்த சவாசனத்திலேயே இருக்க சொல்கின்றனர்
அதை செய்வதே இளக்கென்று எத்தனிக்கின்றனர் இது எத்தனை தவறான அணுகுமுறை ..

வாழ்தல் என்றால் என்ன ,வாழ்வுக்கு எதிர்ப்பதம் தாழ்வு அதாவது சரிவு, குறைவு எனில் வாழ்தல் என்றால் வளர்தல் தானே நொடிக்கு நொடி,நிமிடத்திற்கு நிமிடம்,நாளுக்கு நாள் வளர்த்தல் தானே வாழ்க்கை.உங்கள் settled வார்த்தை இந்த சங்கிலியை அறுத்து எறிகிறதே இதை நீங்கள் அறியவில்லையா என்ன.மீண்டும் அதே கேள்விகணையை தொடுக்கிறீர்கள்..

வாழ்கை என்னும் உச்சமற்ற மலையில் நாங்கள் ஏறிக்கொண்டே இருக்கிறோம் இடை இடை வரும் சிறு பள்ளத்தாக்கில் நீங்கள் எங்களை படுத்துறங்க சொல்கிறீர்கள் செய்கிறோம் ஆனால் அது அடுத்த ஏற்றத்திற்கான ஓய்வு.
ஒட்டுமொத்த தொய்வு அல்ல....
இத்தனை மீறியும் நீங்கள் settled ஆனவர்களை பார்க்க வேண்டும் என்றால் அதுக்கு கல்லறைக்கு தான் செல்ல வேண்டும் உண்மையில் அவர்கள் தான் settled persons.........



அன்பன்...

Comments

Post a Comment