"வாலி"பன் கவிதை உலகின் தாலிபன்


"வாலி"பன் கவிதை உலகின் தாலிபன்







ஒரு வீட்டில் ஒரு பாடல் ஒளித்து கொண்டு இருக்கிறது "புத்தன் ஏசு,காந்தி பிறந்தது பூமியில் எதற்காக என்று" உடனே ஒரு சிறுவன் ஓடி வந்து அம்மா என்னமா பாட்டு இது நல்லாவே இல்ல யாரு எழுத்துனதோ என்று கூறி கொண்டே பாட்டை மாற்றி வைத்தான் "முக்காலா முக்காபுல்லா" பாடி கொண்டே இது எப்படி இருக்கு இந்த மாறி கேளுமா என்ற ஆடி கொண்டே இருந்தான்
காய்கறி நறுக்கி கொண்டிருந்த அந்த தாய் சிரித்துகொண்டே தொடர்ந்தார்
ஏன் என்றால் இந்த 2 பாட்டையும் எழுதியது ஒரே நபர் தான்.......
வாலிப கவிஞர் ஐயா வாலி


குரங்கு என்று எண்ணி தானே 
அதன் வாலில் தீவைத்தான்
அது அழித்தொழித்ததே 
அவன் ஆண்ட தீவைத்தான்.


ஒவ்ஒரு கவிஞருக்கும் பாட்டு எழுத,கவிதை படைக்க ஒரு சூழல் தேவை படும்
அண்ணன் நா.முத்துக்குமார் காரில் அதிக தூரம் பயணித்து கொண்டே பாட்டு எழுதுதல் அவர் பழக்கம்
ஐயா வைரமுத்துவிற்கு அமைதியான மரங்கள் சூழ்ந்த இடம் தேவை, ஆனால்  வாலி அவர்களுக்கோ பல பேர் சூழ்ந்த இடமாயினும்,சாப்பாட்டு மேசை ஆகினும் எங்காயினும் ஒரு பேனா பேப்பர் கொடுத்தால் போதும் மல மல வென கவிதை படைத்தது விடுவார் ஐயா வாலி
அதுவே அவர் தனி சிறப்பு.எல்லாமாதிரியும் கவிதைகள் எல்லா கவிஞர்கலால எழுத முடியாது வாலியை தவிர


மண்குடிசை வாசல் என்றால் 
தென்றல் வர வெறுத்திடுமா
பாலை நிலா ஏழை என்றால் 
வெளிச்சம் தர மறுத்திடுமா


காதல் கீதமா
பக்தி பாடலா
கவித்துவ பாடலா
தத்துவமா
தகிக்கும் காமமா
எல்லாம் அவரிடம் அத்துபடி...
வாலி திரை துறைக்குள் நுழையும் போது எத்தனை கவிஞர்கள் அவருக்கு போட்டியாய்
கண்ணதாசன் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்,
மக்கள் கவி பட்டுக்கோட்டை பாட்டு தான் ஊரெங்கும்,இது இல்லாமல் உடுமலை நாராயண கவி,கவிஞர் மருதகாசி என்று தனி படை வேறு அத்துணை பேர் மத்தியிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் கவிஞர் ஐயா வாலி
தான் இறக்கும் வரை திரை துறையில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு கவிஞன் என்ற பெருமைக்கு சொந்தகாரர் அவர்
எளிய நடையில்,எளிய சொற்களில் தான் சொல்ல வரும் கருத்தை பாமரனுக்கு கூட புரியும் அளவு பாட்டு எழுதுபவர் ஐயா வாலி


நல்ல நூல் வாங்க நாலு காசு செலவழி
அது காட்டும் நல்லநிலைக்கு நீ செல"வழி"


இப்படி தான் இருக்க வேண்டும் ஒரு கவிஞன் என்ற எல்லா மரபையும் உடைத்து
எறிந்தவர் அவர் ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்ப தெரியாதவர்,தன் தேசம் விட்டு வேறு நாடே செல்லாதவர்  ஆனால் அவர் எழுதிய பாடல்கள் கேட்டால் இதை எவரும் நம்ப மாட்டார்கள்
நாம் பேச கூச கூடிய அத்துணை விசயங்களையும் தன் எழுத்தில் எந்த தயக்கமும் இன்றி கூறும் ஒரே கவிஞரும் அவரே.
பாடல் இப்படி தான் இருக்க வேண்டும் என்று எல்லாம் இல்லை இது பிடிக்க வில்லையா இந்த இதை வைத்துகொள் இல்லை என்றால் இதை வைத்துக்கொள் என்று மாறி மாறி பாட்டு கொடுக்கும் கவிஞர் இவர் அபூர்வ சகோதரர்கள் படத்தில் பாட்டை எழுதி அனுப்பிய பிறகு இயக்குனர் ஒப்புக்கொண்டார் எனினும்  கமல் திருப்தி படாததால் வேறு பாட்டு கேட்டார் உடனே வாலி "யோவ் நான் வாலி யா வாலிபாலா(volleyball) ஆள் ஆளுக்கு எத்துறீங்க"என்று திட்டி கொண்டே எழுதிய பாடல் தான் உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்..

சு.ப.வீ ஒரு முறை கலைஞரிடம் கேட்டாராம் முரசொலியில் S.V சேகர் கட்டுரை பார்த்து அவருக்கு இங்கு என்ன வேலை என்று
ஆனால் அப்படி ஒரு வரை பார்த்து கேள்வி கேக்காமல் திராவிட கட்சியே இருக்கும் எனில் அது ஐயா வாலி தான்
அவர்தலைமைக்கு கீழே கலைஞர் பற்றி கருத்தரங்கில் கூட பங்கு பெற்று பேசி இருக்கி்றார் சு.ப.வீ
தன் உடன் இனத்தவர் தலைமை கொண்ட கட்சியையே எதிர்த்து எல்லா மேடைகளிலும் முழங்கிய பெரும் படைப்பாளி வாலி.


கலைஞர் வள்ளவா நீ இருப்பதால் இது
 எதையும் எவர்க்கும் கொடுக்கும் நாடு இது கொடை நாடு
அது எவர்க்கும் எதையும் கொடா நாடு அது கொடநாடு"


ரஜினிகாந்த் இவருக்கு வைத்த பெயர் துருவாச முனி அவ்வளவு கோவம் வரும் இவருக்கு "டேய் நான் மீன் திங்கிற பார்ப்பான் என்கிட்டயேவா" என்று கோபப்படுவார் அவர்

எல்லா மதத்தையும் இனத்தையும் ஒன்றாய் பார்த்து வளர்ந்தவர் அவர்  ஆனால் இன்றும் பலர் அவரை குறிப்பிட்ட இனம் சார்ந்து பேசுவது தான் அபத்தமே....
ஒரே ஆள் அம்பேத்கர் பற்றியும்,அழகிய சிங்கர் பற்றியும் பேச முடியும் எனில் அது நிச்சயம் வாலி மட்டும் தான்
தான் சொல்ல நினைப்பதை கவிதையின் வழியே சொல்ல வேண்டும் என்பதில் மிகுந்த ஆசை கொண்டவர் அவர்
அவரிடம் எதுகை, மோனைகள் விளையாடும்
அதே சமயம் கவித்துமான பாடலுக்கும் அவரிடம் குறைவில்லை இன்றைய சமூகம் ரசிக்கும் பெரும்பாலான எம்.ஜி.ஆர் பாடல் எல்லாம் வாலி வாய் வந்த  வார்த்தைகள் தான்
ஒரு முறை கண்ணதாசன் ஒரு பாடலை கேட்டு விட்டு "வர வர இந்த வாலி பய ஒழுங்கா எழுதவே மாட்டேங்குறான் டா"என்றாராம் உதவியாளரிடம் உடனே அவர் அருகில் வந்து ஐயா அது நம்ப பாட்டு தான் ஐயா என்று நினைவுப்படுத்தினாராம் அப்படி இருவரும் ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு பாடல்கள் எழுதினர்
என்னவாயினும் கண்ணதாசனை வாலியை போல் புகழ்ந்தவர் எவரும் இல்லை


"சீட்டால் தொலைத்த சில்லறைய நீ 
பாட்டலே சம்பாதி
நீ பாரதியின் செம்பாதி"


தனக்கு எதிரான கடை விரிக்கும் எல்லாருக்கும் முதல் வாழ்த்து மடல் செல்வது வாலியிடம் இருந்து தான்
ஏன் அவர் இறக்கும் வரை அத்துணை இளம் கவிஞர்களுக்கும் நா.முத்துக்குமார்,பழ நிபாரதி,நெல்லை ஜெயந்தா,பா.விஜய்,சினேகன்,தாமரை என்று எல்லோரும் கூடும் இடம் இவர் இல்லம் தான்
நான் பாட்டு எழுத போகிறேன் என்று கமல் ஆசி பெற்றதும் இவரிடம் தான் அப்பொழுது அவர் சொன்ன வாசகம் "வாங்கயா வாங்கயா நீங்கலான் எழுதணும் அப்ப தான் எங்களுக்கு சுமை குறையும்"என்றாராம்
அப்படி பட்ட மிக பெரிய மனிதர் ஐயா வாலி
ஒரு முறை ஒரு பத்திரிக்கைகாரர் வாலியிடம் கேட்டார்
உங்களை விட வைரமுத்து சிறப்பாய் எழுதுவதாய் சொல்கிறார்களே நீங்கள் ஏன் அவரை போல் எழுத கூடாது என்று அதற்கு அவர் சொன்னார்
நான் வாலியாக இருக்கவே விரும்புகிறேன் போலியாக அல்ல என்று
இன்றும் இதே எண்ணம் பலருக்கும் இருக்கும்,
இருக்கட்டும்
வைரமுத்து திரைப்பாடலின் கமலஹாசன் எனில் வாலி திரையுலகின் superstar....


இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் 
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்......

#அன்பன்

Comments

Post a Comment