காலா
காலத்தின்விதி
சினிமா ஒரு பெரும் ஊடகம் அது என்ன மாற்றத்தை வேண்டுமானாலும் கொண்டு வரும்
வெறும் 5 படங்கள் தணிக்கை இல்லாமல் கொடுங்கள் திராவிட தனி நாடு வாங்கி காட்டுகிறேன் என்றார் அண்ணா அது ஊடகத்தின் பலத்தை அறிந்து தான்.அப்படி பட்ட சினிமா அதுவும் குறிப்பாக தமிழ் சினிமா பன்னெடுங்காலமாக ஜாதிய ஒடுக்குதலை,ஏற்றதாழ்வை சில உயர் சமூக பெருமைகளை பேசி வந்ததை மிக அதிகமாய் காணலாம்.அதில் இருந்து எல்லாம் வேறுபட்டதாய்,மாறுபட்டதாய் காலாவை பார்க்கிறேன்
நான் ரஜினியின் தீவிர ரசிகன் தான் ஆனாலும் இந்த படம் போற்றபடுவதற்கு ரஜினியை மீறிய என்அற்ற காரணம் இருக்கிறது.
இந்த படம் வெளியிடுவதற்கு முன்பே பல சிக்கல் ரஜினிபடத்தை தடுப்போம் என்ற போர்வையில் இது ரஞ்சித்துக்கு உண்டான எதிர்ப்பு என்பதை அழகாய் மறைத்து விட்டனர் பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு இருந்தவர்கள் உரிமை கேட்டால் ஆதிக்க வெறியர்களுக்கு கோவம் வரத்தானே செய்யும்
பலர் இது ஒரு சமூகத்து படம் இதுவும் சாதி படம் தான் என்கின்றனர்
அங்கு தான் நிற்கிறார் ரஞ்சித் தன் சாதி பெருமையோ,திமிரோ படத்தில் காட்டாமல் தன் உரிமைகளையும் வலியையும் காட்ட அவர் தவற வில்லை
"கலைக்க நினைத்தா கலைய மாட்டோம்,
அழிக்க நினைத்தா அந்த "நினைப்பை" அழிப்போம்" என்பதில் தோனிக்கிறது அவர் பேச வரும் உரிமை
நிரந்தர தீர்வுக்கு என்றுமே வன்முறை வழி உதவாது
ஆனால் உடனடி தீர்வுக்கு அதை விட்டால் வேறு வழி இல்லை என்பதையும்
ஒடுக்கபட்டோர் போராட்டத்திற்கு மற்றவர்கள்( குறிப்பாய்தமிழன் groups)ஆதரவு குறைவே என்பதையும் நேர்த்தியாய் காட்டி இருக்கிறார் ரஞ்சித்
பல ஆண்டு கால அரசியலை வெறும் அந்த 5 நிமிட அப்பா மகன் உரையாடல் வெளி காட்டிவிடும்
"ஆமாடா நாங்க சேரி ஜனங்கள் தான்" என்று துவங்கும் அந்த வசனத்தில் தெரிகிறது பல் நெடுங்கால வலி
வில்லனாக இருக்கும் நானா பட்டேகர் ஒரு தனி மனித ஒழுங்கீடாய் காட்டாமல் ஒரு தத்துவத்தின் ஒழுங்கீடாய் காட்டியது தான் அழகே
அதிகார வர்க்கம் அதை தக்க வைக்க கொலை செய்யும் கொள்ளை அடிக்கும் அத்தனைக்கும் தேவைபட்டால் கடவுளையும் துணைக்கு அழைக்கும்
Manu builders
Dandakaranya nagar
மனசோட குரல்
தேசதுரோகி
வாழ்க மகாராஷ்டிரம்
வில்லன் அருகில் காட்டப்படும் புலி,சிங்கம்
காலில் விழும் காட்சிகள்
அத்தனையும் எதை குறிக்கும் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை
காட்சிக்கு காட்சி தன் கருத்தை சொல்ல ரஞ்சித் தவறியதே இல்லை
எங்கு பார்த்தாலும் புத்தர்,அம்பேத்கர்,பெரியார் அயோத்திதாச பண்டிதர்,ஜோதிராவ் பூலே என்று அவர்கள் படமே காட்ட பட்டு இருக்கும்
பொம்பளைங்க தான் கத்தி பிடிக்கணும்னு சொல்லாதீங்கடே
எங்க உரிமைகள் தான் எங்க சுயநலம்
சுத்தம்,clean,pure இது எல்லாம் உன்னோட முகமூடி உனக்கு என்ன வேணும் நிலம் தான
முடிஞ்சா என்னோட முதுகுல குத்திக்க
அவன் உங்கள கொல்ல மாட்டான் அவனுக்கு நீங்க வேணும் அடிமைகலா வேணும் அதுக்கு மட்டும் தான் வேணும்
என்று எல்லா வசனங்களும் கட்சிகளும் அனல் பறக்க விட்டுஇருக்கிறார்கள்
கடைசி கட்சியில் சென்னையை காட்டி கூறுகையில்
தூரத்தில் தெரியும் ஒரு bannerஇல் make this country clean என்று போட்டு
கீழே H. JHARA என்று போடா பட்டு இருக்கும் அது யாரை குறிக்கிறது என்று சொல்ல வேண்டுமா என்ன
இறுதியாய் ரஜினி இந்த படத்தில் நடித்ததில் வரும் விமர்சனங்கள் எதிர்பார்த்ததே ஆனால் அவர் நடிக்க வில்லை எனில் படம் வெளியிடவே பெரும் போராட்டம் வந்துஇருக்கும்
-அருள்மொழிவிதி

Comments
Post a Comment